மதுரை வருச்சியூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் | அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்
Special Medical Camp at Varuchiyoor Village, Madurai | Minister P. Murthy inaugurated

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வருச்சியூர் கிராமத்தில் (16.05.2022) பொது சுகாதாரத்துறையின் சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ், சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. 10 ஆண்டுகளில் நிறைவேற்ற கூடிய திட்டங்களை இந்த ஓராண்டு காலத்திலேயே நிறைவேற்றி மக்கள் நலனை பாதுகாக்கின்ற ஆற்றல்மிகு முதலமைச்சராக தளபதியார்செயலாற்றி வருகிறார்.
கடந்த ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் அரசு நிதிநிலையை ஏறத்தாழ ரூபாய் 6 இலட்சம் கோடி கடனில் விட்டு சென்றார்கள். இதனை சமாளித்து மாண்புமிகு தளபதியார் அவர்கள் அரசின் நிதி வருவாயை அதிகரிப்பதற்கும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் வெளிப்படை தன்மையுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பொதுமக்களின் நலன் கருதி மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இல்லம் தேடி கல்வித்திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
அந்த வரிசையில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் பெயரில் வருமுன் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவர்கள் அந்தந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்தொற்று இரண்டாம் அலையின் போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆற்றிய அயராத பணி பாராட்டுதலுக்கு உரியது. மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா நோய்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மேலும், வருச்சியூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புறநகர் காவல்நிலையத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள், மாநகர காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்சூரியகலா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.