ஆன்மீகம்செய்திகள்

மதுரை வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் | ரூ.1.5 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம்

Madurai Vandiyur Viragavaperumal Temple | Commencement of Kumbabhishek work at a cost of Rs.1.5 crore

மதுரை மாவட்டம், அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான, அருள்மிகு வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, திருப்பணி துவங்கும் நிகழ்ச்சியான பாலாலயம் இன்று விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவில், மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கிடும் பொருட்டு கள்ளழகர் சேஷ வாகனத்தில் புறப்படும் பெருமை கொண்டது இத்திருத்தலமாகும். மூலஸ்தானத்தில் பூதேவி ஸ்ரீதேவி தாயாருடன் சேவைசாதிக்கும் பெருமாள் திருவாச்சியோடு ஆதி சேஷன் குடைப்பிடிக்க பெருமாள் கருணாமூர்த்தியாகக் காட்சி கொடுக்கும் அற்புத திருத்தலமாக விளங்கும் இந்த வண்டியூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

12 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடைபெறவுள்ள நிலையில் திருப்பணிகள் துவங்கும் துவக்க நிகழ்வாக இன்று கோயிலில் பாலாலயம் விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ பெருமாள் சன்னதி விமானம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி விமானம், ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி விமானம் , ஸ்ரீ நவகிரக சன்னதி விமானம் ஆகிய விமானங்களுக்கு திருப்பணிகள் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு, நடைபெற்ற பாலாலயத்தில் புண்யாகவாசனம் , அக்னி ஆரதனம் , ததுக்தஹோமம் , மஹாபூர்ணாகுதி , அக்னி ஸமாரோபனம் , யாத்ராதானம் ஆகியவை கோயில் மண்டபத்தில் அம்பி பட்டர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்கிட கோயிலை சுற்றி கும்பம் புறப்பாடு நடத்தப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையாளர் மு. ராமசாமி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: