செய்திகள்

மதுரை வண்டியூர் கண்மாயில் நீர் பெருக்கெடுத்து ஓடும் நீர்

Madurai Vandiyur Kanmail overflowing water

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தினசரி மாலை நேரங்களில் பலத்தை மழை பெய்து வருகிறது. இதனால், நகரில் உள்ள கால்வாய்கள் பெருக்கெடுத்து கன்மாய்கள் நிரம்பி வருகிறது. அத்துடன், பலத்த மழையால் மதுரை நகரில் பல தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது .

சில இடங்களில், கால்வாயில் கழிவுநீர் பெருக்கெடுத்து, சாலைகளில் சங்கமம் ஆகிறது. மேலும், பல இடங்களில் கால்வாயில் குப்பைகளை கொட்டி, அடைப்பு ஏற்பட்டு இருப்பதால், மழை நீர் செல்ல வழி இல்லாமல் மதுரையில், மருது பாண்டியர் தெரு, வீரவாஞ்சே தெரு, கோமதிபுரம், ஜூபிலி டவுன், சௌபாக்யா தெரு, திருக்குறள் வீதி ஆகிய தெருக்களில் சாலையிலே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உறி நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர்.
Back to top button
error: