மதுரை லேடீஸ் சர்க்கிள் எண் 8 சார்பாக வரும் 28ந் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி | கலெக்டர் பங்கேற்பு
On behalf of Madurai Ladies Circle No. 8 on 258th Sports Competition for Disabled | Collector participation

மதுரை லேடீஸ் சர்க்கிள் எண் 8 (Madurai Ladies Circle No. 8) சார்பாக மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட், 2022 அன்று மதுரை ரேஸ் கோர்ஸில் உள்ள எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் துவக்க விழா 28.08.2022 அன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. விழாவின் சிறப்பு விருந்தினராக, மதுரை மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.அனீஷ் சேகர் கலந்து கொண்டு விழாாவை துவக்கிவைக்க உள்ளார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவர் டாக்டர் எஸ்.ராஜா மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாற்றுத்திறானிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு விருதினை மதுரை மாவட்ட காவல் கண்காளிப்பாளர் சிவபிரசாத் ஐபிஎஸ்., விருதினை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி வீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை மதுரை தேவதாஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹேமா சதீஸ் மற்றும் டாக்டர் சதிஸ் தேவதாஸ் ஆகியோர் வரவேற்று பொன்னோடை போர்த்தி சிறப்பு செய்கின்றனர்.
இப்பபோட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், மதுரை லேடீஸ் சர்க்கிள் எண் 8 அமைப்பின் தலைவர் டாக்டர் சிந்து சிவா மற்றும் செயலாளர் அபர்னா விக்ரம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை லேடீஸ் சர்க்கிள் எண் 8 அமைப்பின் தலைவர் டாக்டர் சிந்து சிவா கூறுகையில், மதுரை லேடீஸ் சர்க்கிள் எண் 8 எனும் அமைப்பு 51 ஆண்டுகளாக மதுரையில் இயங்கி வருகிறது. ”Educate to Enlighten” என்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
எங்கள் அமைப்பின் சார்பில் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைக் கட்டுமானம், கழிவறைத் தடுப்புக் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுடன் கூடிய பணிகளுக்கு ஆதரவளிக்கிறோம். மேலும் கரும் பலகைகள், கூரை மின்விசிறிகள், விளையாட்டு உபகரணங்கள், மேஜை/நாற்காலிகள் போன்ற கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களை உதவிகளை வழங்குகிறோம்.
இதுவரை பல்வேறு முயற்சிகள் மூலம் ரூ.3.5 கோடிக்கு மேல் நாடு முழுவதும் கல்வி வழங்குவதற்காக எங்கள்அமைப்பு சார்பில் செலவிடப்பட்டுள்ளது. 35,000-க்கும் மேற்பட்ட சலுகை பெற்ற குழந்தைகளுக்கு உள்கட்டமைப்பு மற்றும் உதவிகள் அடைந்துள்ளனர்.
இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நிதி சேகரிப்பை ஏற்பாடு செய்து நிதி திரட்டுகிறோம். இந்த ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில், 28 ஆகஸ்ட் 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதுரை ரேஸ் கோர்ஸில் உள்ள எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
லிமிட்லெஸ் 2022- விளையாட்டுப் போட்டியில் மாநிலம் முழுவதிலுமிருந்து வீரர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில் நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த அளவிலான நிகழ்வை ஏற்பாடு செய்வதில் MLC 8 மிகவும் பெருமை கொள்கிறது.
எம்எல்சி 8 மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது என்றார்.