செய்திகள்

மதுரை லெட்சுமி ஹோமியோபதி கிளினிக் மருத்துவ நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் | 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

Free Medical Camp on behalf of Madurai Letsumi Homeopathy Clinic Medical Center | More than 100 people attended and benefited

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே கேட் அருகில் அமைந்திருக்கும் லெட்சுமி ஹோமியோபதி கிளினிக் மருத்துவ நிலையத்தில் இன்று (15.05.2022) இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச ஹோமியோபதி மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், டாக்டர்.சுதா குருநமசிவாயம் BHMS., M.ScDFSM,PGD,N&D, CNCC, PGD G&G (Homeopathy Dieitition & Nutririonist) மற்றும் டாக்டர்.ஜி.ஸ்ரீராகினி M.B.B.S., (பொது மருத்துவர்) ஆகியோர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினர்.

நடைபெற்ற இந்த முகாமில் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்து ஆலோசனை பெற்று அவர்களுக்கு ஒரு வாரத்திற்கான ஹோமியோபதி மருந்துகள் இலவசமாக பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து லெட்சுமி ஹோமியோபதி கிளினிக் இயக்குநர் டாக்டர்.சுதா குருநமசிவாயம் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஹோமியோபதி கிளினிக் இயங்கி வருகிறது. எனது தந்தையார் கூறிய முறைப்படி அதே முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற முகாமில் பொது மருத்துவம், சிறு நீரக மருத்துவம், பெண்கள் நலம், கர்ப்பப்பை & மார்பகம் பிரசச்னைகள், எலும்பு மூட்டு பிரச்சனைகள், மூலம், தைராய்டு, ஆட்டிசம், தோல் பிரச்சனைகள். குழந்தையின்மை, மனநலம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனையுடன் சிகிச்சை மற்றும் ஒரு வார காலத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கியுள்ளோம்.

இந்த இலவச சிகிச்சை முகாம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். தேவையை கருத்தில் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இதன் முக்கிய நோக்கமே ஆங்கில மருத்துவத்தில் இருக்கும் அத்தனை சிகிச்சை முறைகளும் ஹோமியோபதி மருத்துவத்திலும் உள்ளது. முக்கியமாக இந்த மருத்துவத்தில் பக்கவிளைவுகள் முற்றிலுமாக இல்லை. அதே நேரத்தில் நோயாளிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும்.

ஹோமியோபதி சிகிச்சையில், ஊசி, மாத்திரைகள் இல்லாத காரணத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பக் கூடிய மருத்துவம். ஆதலால் ஹோமியோபதி மருத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், என்ற நோக்கத்தின் அடிப்படையில் இலவச சிகிச்சை முகாம் நடத்தி வருகின்றோம்.

மதுரை மட்டுமின்றி சென்னையிலும் லெட்சுமி ஹோமியோபதி கிளினிக் உள்ளது. விரைவில் ராஜபாளையத்திலும் கிளினிக் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றோம்.

குறிப்பாக பெண்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும், ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல தீர்வு உள்ளது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என்பதால், தயங்காமல் ஹோமியோபதி சிகிச்சைக்கு பெண்கள் முன் வர வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மருத்துவமனை முகவரி மற்றும் தொடர்பு எண்

லெட்சுமி ஹோமியோபதி கிளினிக்
இரயில்வே கேட் அருகில், திருப்பரங்குன்றம், மதுரை 5.
தொலைபேசி எண்: 93448 45383.

DR. SUDHA GURUNAMASIVAYAM, B.H.M.S , MScDFSM, PGD N&D, CNCC, PGD G&C
Homeopathy, Dietitian& Nutritionist, family counseling
Contact Number:+91 93448 45383

Website:
www.lakshmihomeopathyclinic.com
www.drsudhastardiet.com

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
9
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: