செய்திகள்

மதுரை ரைபிள் கிளப்பின் 64 ஆவது பொதுக்குழு கூட்டம்

64th General Body Meeting of Madurai Rifle Club

மதுரை ரைபிள் கிளப்பின் 64 ஆவது பொதுக்குழு கூட்டம் (22.8.2021) மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் மற்றும் மதுரை ரைபிள் கிளப்பின் தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹாதலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2019ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகள், தேர்வு போட்டிகள் பங்கேற்று பரிசு பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கவி ரக்ஷனா, சாம் ஜார்ஜ் சஜன், வர்ஷா, கேதாரிணி ஹர்சனா, அமர் சக்கரவர்த்தி கிஷோர் மற்றும் ஆதிரை ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்பு சிறப்புரையாற்றிய மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் மதுரை ரைபிள் கிளப் சிறப்பாக செயல்படுவதாகவும், வரும் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிக்கு சென்று மதுரைக்கு பெருமை சேர்க்கும் படி கூறினார்.

உடன் மூத்த துணை தலைவர் மருத்துவர் சாம்.C.போஸ், செயலாளர் S.V.S.S.வேல்சங்கர், இணைச் செயலாளர்கள் T.பகலவன், K.மோகன் மற்றும் பொருளாளர் G.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
7
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: