
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நடன நாடகத்தினை சங்கம் வளர்ந்த மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் (23.08.2022) அன்று மாலை 06.00 மணியளவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
சங்கம் வளர்ந்த மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் ஸ்ரீராம் சர்மாவின் வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது. அறுபது கலைஞர்கள் தோன்ற பதினெட்டாம் நூற்றாண்டை கண்முன்னே கொண்டு வரும் காவிய கதைகள் குறித்தும்.
மற்றும் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பொற்காலத் தோற்றம் குறித்தும், பிரம்மாண்டமாக அரங்கேறவிருக்கும் தமிழ் மண்ணின் ஈர வீர சரித்திரம் குறித்தும், அன்னியர்களால் மறைக்கப்பட்டு பல்லாண்டு கால உழைப்பின் பயனாக மீண்டெழுந்திருக்கும் தாய்த் தமிழ் மண்ணின் வெற்றிச் சரித்திரம் குறித்தும், தென்னகத்தின் ஒரே ம்யூஸிக்கல் தியேட்டர் குறித்தும் இந்நாட்டிய நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கப்பட உள்ளது.
வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக ராஜா முத்தையா மன்றத்தில் (23.08.2022)-அன்று மாலை 06.00 மணிளவில் நடத்தப்படும் இசையார்ந்த நடன நாடக நிகழ்ச்சியில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்நாட்டிய நாடக நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நாட்டிய நாடக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். மேலும், இந்நாட்டிய நாடக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.