மதுரை ரயில்வே மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா
Annual Sports Festival of Madurai Railway High School

மதுரை ரயில்வே மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை (02.9.2022) அன்று மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பள்ளி மாணவ, மாணவிகள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்பு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், பள்ளி முதல்வர் அஞ்சம்மாள், தலைமை ஆசிரியை மாயா பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.