
மதுரை யாதவா கல்லூரியில் 1980- 83 ஆண்டுகளில் பயின்ற கலை அறிவியல், வணிகவியல்துறை முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பாண்டியன் ஹோட்டலில் 10.01.2021 அன்று நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் அழகு சுந்தரம், பேராசிரியர் சந்திரசேகரன், இ.கம்யூ.செய்தி தொடர்பாளர் கனகராஜ், மத்திய தணிக்கைத்துறை அதிகாரி இளையகுமார், சென்னை ஆவின் இணை இயக்குனர் முருகேசன், மதுரை மாநகராட்சி முன்னாள் உதவி கமிஷனர் நாகஜோதி, தேசிய கைத்தறி வளர்ச்சி கழக தலைவர் சந்திரசேகர்,சிங்கப்பூர் தொழில் நிறுவன தலைவர் கொல்லங்குடி முத்தையா, மதுரை ரயில்வே மக்கள் தொடர்பு ஆய்வாளர் ராதா உள்பட 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு விழாவினை முன்னிட்டு முன்னாள் மாணவர் சுப.செல்வம் எனும் முன்னாள் மாணவர் பாசப்பிணைப்பு எனும் தலைப்பில் கவிதை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் வரிகள்…
பாசப்பிணைப்பு
நம்
கல்லூரி நாட்கள் மீது
காதல் இருந்தது.
அதை
கலந்து பேசும் வாய்ப்பு
வெறும் கனவாய்
கழிந்தது.
சிங்கப்பூரில் இருந்து
ஒரு சிக்னல் வந்தது
அது சிந்தை குளிர
சேர்ந்து குலவும்
நாளைத் தந்தது…
எட்டுத் திக்கும்
இருந்து வந்த
இளமைமாறாக் கூட்டம்
பாண்டியன் ஹோட்டலில் ஓர்
பரவசக் கொண்டாட்டம்…
இது
முத்தான நிகழ்ச்சி
நம்
முத்தையாவின்
முயற்சி…
உருவம் மாறி
வந்தவர்க்கும்
உள்ளம் மாறவில்லை,
ஒரு தாயின்
மக்களென்ற
உணர்வும்
மாறவில்லை…
கை குலுக்கி,
கட்டித் தழுவி,
நட்பு ஒளிர்ந்தது
முப்பத்தெட்டு
ஆண்டு பிரிவு
முடிந்து போனது…
யாது
இவர் கல்லூரி
என மேதினியோர்
வியக்க
யாதவர் கல்லூரி
மாணவர்கள்
ஜெயித்தார்…
பல துறையில்
காலூன்றி
முத்திரையைப்
பதித்தார்.
பேராசிரிய பெருமக்கள்
பெருமகிழ்ச்சியில்
திளைத்தார்…
உடன்பயின்ற
தோழர்களின்
உயர்வில்
மனமகிழ்ச்சி
ஒவ்வொருவர்
உள்ளத்திலும்
ஒன்றிணைந்த
நெகிழ்ச்சி…
கற்றவர்கள் சபையில்
மகிழ்ச்சி
கட்டவிழ்ந்தது
இதை கட்டமைத்த
நண்பர்கள்
உழைப்பில் மனம்
நெகிழ்ந்தது…
ஆண்டுதோறும்
இது போன்று
மீண்டும் கூடவேண்டும்…
கூடல்நகர் மீனாட்சி
மனமருள வேண்டும் !!
அன்புடன்
சுப. செல்வம்.
வேதியியல் துறை