மதுரை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் புதிய நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை
Madurai Mayor V. Indrani Ponvasant led the Bhoomi Puja for building a new welfare center

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.69 சம்மட்டிபுரம் மெயின் ரோடு பகுதியில் புதிய நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை மாண்புமிகு மேயர் திவ.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் (03.08.2022) நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவற்றில் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம், பொது சுகாதார திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் புதிதாக 62 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ.16.16 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் ஒவ்வொரு மண்டலத்திலும் நலவாழ்வு மையங்கள் அமைப்பதற்கு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி மண்டலம் 3 வார்டு எண்.69 சம்மட்டிபுரம் மெயின் ரோடு பகுதியில் தேசிய நகர்ப்பற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நலவாழ்வு மையத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.