மதுரை மீனாட்சி செவிலியர் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா
First Convocation of Madurai Meenakshi College of Nursing

மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி செவிலியர் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமான இக்கல்லூரி, செவிலியப் பணிக்காக திறன்வாய்ந்த மாணவர்களை உருவாக்கும் தமிழ்நாட்டின் கௌரவம்மிக்க செவிலிய கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்சிங் (செவிலியப் பணி) கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்ற 28 மாணவர்களுக்கு இந்நிகழ்வின்போது, இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்களுள் முதன்மையான மூன்று மாணவர்கள், ரூ.1,75,000/- ரொக்கப் பரிசுகளோடு சேர்த்து கல்வியில் சிறப்பான செயல்பாட்டிற்காக சின்னம்மாள் கல்விச்செல்வம் விருதையும் பெற்றனர்.
காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குனர் – தலைமையகம்,எம். ரவி இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
மேலும், பட்டமளிப்பு விழா சிறப்புரையை அவர் வழங்கினார். இந்நிகழ்வில், மதுரை, மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் மற்றும் காமினி குருசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இவ்விழா நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்கள் நிகழ்த்திய பல கலை நிகழ்ச்சிகள் அவர்களது திறன்களை நேர்த்தியாக வெளிப்படுத்தியதோடு, பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றது.
இந்நிகழ்வின்போது, டாக்டர். குருசங்கர் பேசுகையில், “உயர் திறனும், தொழில்முறை நேர்த்தியும், பொறுப்புறுதியும், கனிவும் கொண்ட செவிலியர்களை எமது கல்லூரி உருவாக்கியிருப்பது எனக்கு அதிக திருப்தியையும், மனநிறைவையம் தருகிறது. செவிலியருக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவ பண்புகள் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் ஆகியவற்றில் உயர் நேர்த்தி நிலையை எட்டுவது மீது எமது கல்லூரி உறுதியான பொறுப்புறுதியையும், அர்ப்பணிப்பையும் கொண்டிருக்கிறது.
சிறப்பான இந்த பணியின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கும் எமது மாணவர்களுக்கும் மற்றும் செவிலியருக்கான கல்வி, பணி மற்றும் ஆராய்ச்சியில் தொழில்முறை சார்ந்த சுயாதீனத்தை நிலைநாட்டவும் எமது மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு விரிவான கண்ணோட்டத்திலிருந்து சுகாதார பராமரிப்பு சேவையை அணுகுகின்ற திறனையும், மனப்பான்மையையும் கொண்டவர்களாக மாணவர்களை தயார் செய்வதை கல்லூரியில் நடத்தப்படும் விரிவான நடைமுறை பயிற்சி அமர்வுகள் நோக்கமாக கொண்டிருக்கின்றன.
அவர்கள் ஆற்றுகின்ற பணியில் தகுதிவாய்ந்த திறனையும் மற்றும் செவிலியர் பணியில் புரிந்துணர்வும், அக்கறையும், கனிவும் கொண்டவர்களாக அவர்களை உருவாக்குவது எமது கல்வித் திட்டத்தின் குறிக்கோளாகும். நான்கு ஆண்டுகள் கல்வித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய மனமார நான் வாழ்த்துகிறேன்,” என்று கூறினார்.
மீனாட்சி செவிலியர் கல்லூரி, 2017-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது எஸ்.ஆர். டிரஸ்டால் இணைக்கப்படுகிறது. இந்திய நர்சிங் கவுன்சில் (புதுடெல்லி) மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால உதவியாளர்கள் கவுன்சில் ஆகிய அமைப்புகளின் அங்கீகாரத்தையும் இக்கல்லூரி பெற்றிருக்கிறது. கோட்டக்குடி என்ற இடத்தில் சுற்றுச்சூழலக்கு உகந்த இனிய சூழலில் 19 ஏக்கர்கள் என்ற அளவில் விரிந்து பரந்த நிலப்பரப்பில் மீனாட்சி செவிலியர் கல்லூரி அமைந்திருக்கிறது.
சிறப்பான பரிசோதனையகம் மற்றும் வகுப்பறை வசதிகள் கொண்ட இக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த கற்றலை மேம்படுத்துவதற்கு நிஜமான தோற்ற அமைவு கொண்ட செயற்கை மனித உருவ பொம்மைகளுடன் கூடிய முழுமையான சிமுலேஷன் லேப் இயங்கி வருகிறது. இவ்வசதியைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் ஒரே செவிலியர் கல்லூரி என்ற பெருமையை மதுரை, மீனாட்சி செவிலியர் கல்லூரி கொண்டிருக்கிறது.