செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு ரத்தம் கொட்டியது | பாகன் அடித்ததாக பக்தர்கள் புகார்

Madurai Meenakshi Amman temple elephant shed blood for Parvati Devotees complain of beating Pagan

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் காலை, மாலை இரு வேலையும் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்பாளும் உற்சவ மூர்த்திகளாக பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வருவது வழக்கம்.

இன்று காலை நடைபெற்ற வீதி உலாவின் போது சுவாமி, அம்மாளு புறப்பாட்டின் போது யானை பார்வதி முன்னாடி செல்லும் வழியெல்லாம் யானையின் துதிக்கையில் இருந்து தரையில் ரத்தம் வழிந்த நிலையில் சென்றதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இதற்குக் காரணம் நேற்று மாலை ஊர்வலத்தின் போது பாகனின் சொல்பேச்சை கேட்காததால் யானையை பாகன் அடித்து துன்புறுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர். யானை பார்வதி ஏற்கனவே கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தீவிர விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: