மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசல் பக்கத்துல வீர வசந்தராயர் அப்டீங்கிற மண்டபம் இருக்கு. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இராத்திரி இந்த மண்டபத்தில தீ் விபத்து ஏற்பட்டுச்சு.
மின்கசிவால தீ விபத்து ஏற்பட்டது அப்டீனு சொல்லப்பட்டாலும், அந்த பகுதியில இருந்த கடைகள் எல்லாமே தீ ல எரிஞ்சிருச்சு. அதுக்கு அப்புறமா கடைகள் அமைக்க தடைவிதிக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவில்ல நடந்த இந்த தீ விபத்து அன்னைக்கு ரொம்பவே பேசப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது மறுசீரமைப்புப் பணிகள் துவங்கிருக்கு. அதாவது வீரவசந்தராயர் மண்டபத்த புனரமைக்கும் பணியான கல்தூண்கள் அமைக்குறதுக்கு பூமி பூஜை சிறப்பு முடிஞ்சிருச்சு. இந்த பூஜையில மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உள்பட பலரும் கலந்துகிட்டாங்க.
வீரவசந்தராயர் மண்டபம் மறு சீரமைப்பு செய்ய 4 வருசமா ? அப்டீனாலும், மதுர மக்கள் புதுப்பொலிவோட அத பார்ப்பதற்கு காத்துக்கிட்டு இருக்காங்க. சித்திர திருவிழா வரும் நேரத்துல இந்த விசயம் மதுர மக்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கு ஆனந்தமான தேசிதான்.