ஆன்மீகம்செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி

Madurai Meenakshiyamman silver parrot display for devotees

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.

ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி திருவிழாவானது ஆகஸ்ட் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

திருவிழாவின் 6ஆம் நாளான இன்று மீனாட்சி அம்மன் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகணத்தில் எழுந்தருளி அருள்பாலிபார் என்பது விசேஷமான ஒன்று.

இதனையொட்டி மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: