செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் பணியாளர்கள் & குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Corona Vaccination Special Camp for Staff & Family Members at Meenakshi Temple, Madurai

மதுரை மாநகராட்சி சார்பில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

மதுரை மாநகராட்சி சார்பில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், அவர்கள் ஆகியோர் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் (03.06.2021) துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்தாவது: தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களை எரியூட்டவதற்கு தத்தனேரி மற்றும் கீரைத்துறையில் மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களை உடனுக்குடன் எரியூட்டவதற்கு மயானங்களில் கூடுதலாக இரண்டு மின் மயானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு தங்களது குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்வதற்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அவர்களின் சிரமத்தை போக்கிடும் விதமாக ஏழை, எளிய மக்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் JCI (Junior Chamber International – Madurai Central) ஆகியோர்களுடன் இணைந்து (தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில்) இன்று 03.06.2021 வியாழக்கிழமை முதல் ஒரு மாத காலத்திற்கு மட்டும் இலவசமாக எரியூட்டப்படுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தமிழக அரசு எடுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைககளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பான தகவல் பெறுவதற்கு மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்.842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் குமரகுருபரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர்கள் மகேஸ்வரன், நவீன் பாண்டியன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: