மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ரக்க்ஷா பந்தன்
Raksha Bandhan on behalf of All India Bar Association in Madurai District Court

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ரக்க்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. சகோதரத்துவத்தை போற்றும் வகையில் வழக்கறிஞர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளில் ரக்க்ஷா கயிற்றை கட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதுகுறித்து அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், எங்கள் சங்க்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ரக்க்ஷா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் அதேபோல் கொண்டாடப்பட்டது.
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது என்று தெரிவித்தார்.