செய்திகள்விருது | விழா | கூட்டம்

மதுரை மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய இருபது கலைஞர்களுக்கு விருதுகள் | பெயர் பட்டியல் கலெக்டர் அறிவிப்பு

Awards to twenty artists who excelled in Madurai district Collector Information

தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மதுரை மாவட்டக்கலை மன்றத்தின் வாயிலாக 2018-2019, 2021-2022-ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் சிறந்த 20 கலைஞர்கள் விருதுகள் வழங்கிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலைப்பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக்கலை மன்றங்களின் வாயிலாக 2002-2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

2018-2019, 2021-2022-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் 28.07.2022 அன்று நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் பதவி வழி மற்றும் பதவி சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் 2018-2019-ஆம் ஆண்டிற்கு விருது பெற பல்வேறு கலைப்பிரிவைச் சார்ந்த பி.மதுஸ்ரீ (வாய்ப்பட்டு) அவர்களுக்கு கலைஇளமணி விருதும், பூ.கார்மேகம் (கிராமியக் கலைஞர்) அவர்களுக்கு கலை வளர்மணி விருதும். க.ராமர் (தெருக்கூத்து) அவர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், ம.கருப்பையா (கொம்புக் கலைஞர்) அவர்களுக்கு கலை நன்மணி விருதும், க.ரெத்தினகிரி (தவில்) அவர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் 2021-2022-ஆம் ஆண்டிற்கு விருது பெற பல்வேறு கலைப்பிரிவைச் சார்ந்த ரா.ஹரிணி (பரதம்), ரா.சந்துரு (ஒயிலாட்டம்), ஜெ.அதீஸ்ராம் (சிலம்பம்) அவர்கள் ஆகியோர்களுக்கு கலை இளமணி விருதும், அ.பிரகாஷ் (நாட்டுப்புறக் கலைஞர்), அ.விக்னேஷ் (ஓவியம்), ம.செந்தில்குமார் (ஒயிலாட்டம்) அவர்கள் ஆகியோர்களுக்கு கலை வளர்மணி விருதும், திருமதி.த.தங்கராக்காயி (கிராமிய பாடகி), மா.ஆண்டோராஜ் (தவில்).

மற்றும் வே.ஜாஸ்மின் (பரதம்) அவர்கள் ஆகியோர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், பெ.ஷேக்மஸ்தான் (நாதஸ்வரம்), இரா.வேல்முருகன் (தப்பாட்டம்), அ.ஷாஜஹான் (பொம்மலாட்டம்) அவர்கள் ஆகியோர்களுக்கு கலை நன்மணி விருதும், வ.தர்மா (திருநங்கை) (கரகாட்டம்), எம்.ஜீ.முனியராஜன் (நாடகம்), வா.ராஜேந்திரன் (ராஜாராணி ஆட்டம்) அவர்கள் ஆகியோர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி, விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: