கலெக்டர்செய்திகள்

மதுரை மாவட்டம் முழுவதும் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் | ஆர்வலர்கள் அனைவருக்கும் கலெக்டர் அழைப்பு

Plan to plant 10 lakh saplings across Madurai district Collector Calling All Aspirants

தமிழக அரசின் முன்னோடித் திட்டமான “பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின்” ஒரு பகுதியாக மதுரையில் “மாமதுரை போற்றுதும்” என்னும் தொலைநோக்கு பார்வையுடன், தமிழகத்தில் பசுமைப் பரப்பை (Green Cover) அதிகரிக்கவும் பல்லுயிர் வளம் (Bio Diversity) பெருக்கவும் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையிலும் மதுரை மாவட்டம் முழுவதும் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வேம்பு, இலுப்பை போன்ற பாரம்பரிய மரங்களும் மஞ்சநத்தி, புங்கை, பூவரசு போன்ற மருத்துவ குணங்கள் மிகுந்த மரங்களும் மா, கொய்யா, நாவல் போன்ற பழமரங்களும் நடப்படும். இந்த மாபெரும் முன்னெடுப்பில் பங்கெடுக்க அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பசுமை அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள், மாணவ, மாணவியர்கள் பெருந்திரளாகப் பங்கெடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நர்சரி வைத்துள்ளவர்கள் தங்கள் பங்களிப்பினை மரக்கன்றுகளாகவும் பொருளாகவும் மனித உழைப்பாகவும் அளிக்கலாம். மரக்கன்றுகள் தொடர்பான பதிவுகளையும், இந்த முன்னெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் வருகையையும் 10.08.2022-ஆம் தேதிக்குள் https://docs.google.com/forms/d/1Xy-tqa7RiXhYAzYye8udz5XrD7j g5ao2pzKM3hIGdE/prefill என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 93630 05523 மற்றும் 94452 29295 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், கட்செவி அஞ்சல் (What’s app) மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியும் தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: