கலெக்டர்செய்திகள்

மதுரை மாவட்டம் சோளக்குருணி கிராமத்தில் 481 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் | கலெக்டர் வழங்கினார்

Welfare assistance to 481 beneficiaries in Solakuruni village of Madurai district provided Collector

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், சோளக்குருணி கிராமத்தில் இன்று (20.07.2022) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர்பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 481 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:-

கொரோனா தொற்றுப்பரவல் கடந்த 2 வருட காலமாக உச்சநிலையில் இருந்த காரணத்தினால் மக்கள் தொடர்பு முகாம், மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது, கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அனைத்துத்துறைகளின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில், அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையில் மாதந்தோறும் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கடந்த மாதம் 21.06.2022-அன்று மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குலமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது. அதனைத் தொடரந்து, இன்றைய தினம் மதுரை தெற்கு வட்டம், சோளக்குருணி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 481 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சமூக பாதுகாப்பு நலத்துறையின் சார்பில் 85 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முதன்மையான நோக்கமாகும்.

இம்முகாம்கள் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்களுக்கான ஓய்வுதியத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்திட்டம் என பல்வேறு திட்டங்கள் பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள் அனைத்தும் மக்களை நேரடியாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

இன்றைய தினம் சோளக்குருணி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை (ச.பா.தி) சார்பில் சமூக பாதுகாப்பு திட்ட நிதி உதவி வழங்கும் திட்டததின் கீழ் 85 பயனாளிகளுக்கும், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா (இ-பட்டா) வழங்கும் திட்டத்தின் கீழ் 237 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் முழுப்புலம் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கும்.

ஒருங்கிணைந்த சான்று திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கும், வருவாய்த்துறை (குடிமைப் பொருள்) சார்பில் புதிய குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கும், கால்நடை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கும்.

கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர்க்கடன் மற்றும் சுய உதவிக்குழுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கும், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறு வணிக உதவி மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கும்.

தொழிலாளர் நலத்துறை சார்பில் ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக 5 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக வேலை அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளர் நல வாரிய அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கும் மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 2 பயனாளிக்கும் என மொத்தம் 481 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் (மேலூர்) பிரிதோஷ் பாத்திமா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன் அவர்கள், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: