கலெக்டர்செய்திகள்

மதுரை மாவட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Collector Survey on All Village Integrated Agricultural Development Program Activities of Madurai District Artist

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்திடும் நோக்கில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை. தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, விதை சான்றளிப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளடக்கிய 15 துறைகளைக் கொண்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மொத்தம் 112 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வரப்பு பயிர்கள் (துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு) ஆகியவை கிராம பஞ்சாயத்துக்கு 15 எக்டர் வீதம் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 5 கைத்தெளிப்பான்கள் மற்றும் 5 விசைத்தெளிப்பான்கள் அல்லது 5 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை பயனுள்ள வேளாண் நிலங்களாக மாற்றிடும் நோக்கில் இதுவரை 39 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசு நில தொகுப்புகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியான தரிசு நிலங்களை கண்டறிந்து தொகுப்புகளாக அமைந்திட வேண்டும். தரிசு நில தொகுப்புகள் தொடர்ச்சியாக அமையாதபோது இடையில் உள்ள 2 முதல் 3 ஏக்கர் வரை சாகுபடி நிலங்களையும் கொண்டு வந்து தொடர்ச்சியான தரிசு நிலத் தெர்குப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

தரிசு நில தொகுப்பு அமைப்பதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவ்வாறு அமைக்கப்பட்ட தரிசு நில தொகுப்புகள் 1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்புக்குழுக்களாக வேளாண்மைத்துறை/தோட்டக்கலைத்துறை மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட தரிசு நிலத்தொகுப்புகள் விவரங்களை ஆழ்துளை /குழாய்க் கிணறு அமைக்கும் பொருட்டு வேளாண்மைப்பொறியியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு / குழாய்க் கிணறு பொதுவாக அரசு புறம்போக்கு நிலத்தில் /தொகுப்புக்குள் தனியார் நிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

நீர் இறைப்பதற்கு மின் இணைப்பு (அல்லது) சூரிய சக்தி பம்பு செட் அமைத்து வேளாண்மை பொறியியல் துறை மூலம் செய்யப்படும். மேலும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் செல்லம்பட்டி வட்டாரம், விக்ரமங்கலம் கிராம பஞ்சாயத்தில் ரூ.10.5 இலட்சம் மதிப்பீட்டில் எண் உலர்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: