மதுரை மாவட்டத்தில் நெல் சாகுபடி 42,500 ஹெக்டேர், சிறுதானியம் 34,444 ஹெக்டேர், பயறு வகைகள் 10,400 ஹெக்டேர், கரும்பு 2,200 ஹெக்டேர், பருத்தி 10,400 ஹெக்டேர் இலக்கு நிர்ணம்
In Madurai district, paddy cultivation is 42,500 hectares, small grains 34,444 hectares, pulses 10,400 hectares, sugarcane 2,200 hectares, cotton 10,400 hectares.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கெஞ்சம்பட்டியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் அறிவியல் நிலையம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 15 துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில் மொத்த இலக்கு நெல் சாகுபடி 42,500 ஹெக்டேர், சிறுதானியம் 34,444 ஹெக்டேர், பயறு வகைகள் 10,400 ஹெக்டேர், கரும்பு 2,200 ஹெக்டேர், பருத்தி 10,400 ஹெக்டேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற ஆண்டை போலவே குறுவை நெல் சாகுபடி பரப்பு 9,704 ஹெக்டேர் சாதனை அடையப்படும். சிறுதானியம் 448 ஹெக்டேர், பயறு வகைகள் 127 ஹெக்டேர், கரும்பு 652 ஹெக்டேர், பருத்தி 284 ஹெக்டேர் சாதனை அடையப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 2021-2022-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் 58 கிராம பஞ்சாயத்துகளில் 22 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு, 18 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு தரிசு நிலங்கள் விளை நிலங்களாக்குவதற்கு மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டு 112 கிராம பஞ்சாயத்துகளில் இதுவரை 35 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கலைஞர் திட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று விநியோகம், கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் விநியோகம், வரப்பில் பயறு விதைகள் விநியோகம் மற்றும் தோட்டக்கலையில் வீட்டுத்தோட்டம் அமைத்தல், தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், வரப்பில் பழ மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண்மை பொறியியல் துறை மூலமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பண்ணைக்குட்டைகள் மற்றும் நீர் ஆதாரங்களை தூர் வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் அறிவியல் நிலையம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 15 துறைகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் எல்.கொட்டாம்பட்டியில் குளம் புனரமைப்பு திட்டப் பணிகளையும், மரக்கன்றுகள், நாற்றாங்கால் அமைக்கப்பட்ட பணிகளையும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகளையும் மற்றும் எல்.கொட்டாம்பட்டி பகுதிக்குட்பட்ட சீலார்பட்டியில் அம்ரித் சரோவர் திட்டப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெ.விவேகானந்தன் உட்பட வேளாண்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.