
மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எனர்.10 நாள்.29.04.2022-ன் படி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண் / வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கை செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 22 நாள் 26.07.2022-ன்படி மேற்படி மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.10, நாள்:29.04.2022-ல் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட நிபந்தனைகளில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் கீழ்கண்டவாறு திருத்தங்கள் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்படும் நிபந்தனை
1. பொதுப்பணித்துறை என பிரசுரம் செய்யப்பட்டுள்ள அனைத்தும் நீர்வளத்துறை என மாற்றம் செய்யப்படுகிறது.
நீக்கம் செய்யப்படும் நிபந்தனை
2. பக்க எனர்.4-ல் உள்ள 8-ஆம் நிபந்தனை நீக்கப்படுகிறது.
புதிதாக சேர்க்கப்படும் நிபந்தனைகள்
3. விண்ணப்பதாரர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற்ற பின்னர், பயணாளிகள் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ,/ வட்டார வளர்ச்சி அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடமிருந்து மனர் எடுக்கப்படும் வாகன எண்ணை சமர்ப்பித்து அனுமதி வழங்கிய காலத்திற்கு மறு உத்தரவு பெறப்பட்ட பின்னரே மண் எடுக்க வேண்டும்.
எனவே, வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும், கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் // மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை சமர்ப்பித்தாலே போதும் என்றும், வட்டாட்சியருடன் ஒப்பந்தம் ஏதும் ஏற்படுத்தாமலேயே விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.