மதுரை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் துவக்கி வைத்தனர்
Madurai Mayor Indrani Ponvasant, Collector inaugurated a special camp for the differently abled.

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை மேயர் வ.இந்திராணி பொன் வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், ஆகியோர் (06.08.2022) துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று (06.08.2022) மாநகராட்சி வார்டு எண். 21, 22, 56, 57, 58 ஆகிய பகுதிகளுக்கு ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்.
மேலும் 08.08.2022 (திங்கட்கிழமை) அன்று வார்டு எண்.59, 60, 61, 75, 76, 77 ஆகிய வார்டு பகுதிகளுக்கு சுந்தரராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், 10.08.2022 (புதன்கிழமை) அன்று வார்டு எண்.50, 51, 52, 54, 55 ஆகிய பகுதிகளுக்கு சிம்மக்கல் பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
இன்று (06.08.2022) வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் இணைப்புசக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 30 நபர்களும், கைப்பேசி வேண்டி 2 நபர்களும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வேண்டி 7 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 2 நபர்களும், நவீன செயற்கை அவயம் வேண்டி 4 நபர்களும், மூன்று சக்கர சைக்கள் வேண்டி 3 நபர்களும், நவீன காதொலி கருவி வேண்டி 3 நபர்களும், வங்கிக்கடன் வேண்டி 18 நபர்களும், சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி 1 நபரும்-
மேலும், பார்வையற்றோருக்கான மடக்கு ஊன்றுகோல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி 99 நபர்களும், தனித்துவ அடையாள அட்டை பதிவு செய்ய வேண்டி 71 நபர்களும், இரயில் மற்றும் பேருந்து பயண அட்டை வேண்டி 68 நபர்களும் என உதவிகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இம்முகாமில் 74 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று நடைபெற்ற முகாமில் 320 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, வேலை வாய்ப்புத் துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.