
மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ் சேகர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 01.07.2022-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையலாம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக புதிய கட்டிட வளாகத்தில் தரைத்தளத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் 01.07.2022-ஆம் தேதி முற்பகல் 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த கோரிக்கை விண்ணப்பங்களையும் வழங்கிடலாம்.
எனவே, மேற்கண்டவாறு நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை விண்ணப்பங்களோடு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றை இணைத்து மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ் சேகர் நேரில் வழங்கி பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.