
மதுரை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு நடுநிலைப்பள்ளியில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாழ்வுத்துறையின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஹவுசிங் யூனிட், வில்லாபுரம், மதுரை-11 என்ற முகவரியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு கடும் ஊனத்தால் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
மேலும், இம்மாணவ, மாணவியர்களுக்கு தங்கும் விடுதி உணவு, பாடப்புத்தகங்கள், வருடத்திற்கு நான்கு செட் சீருடை (யூனிபார்ம் டிரஸ்) இலவசமாக வழங்கப்படும். அத்துடன் இயன்முறை தசைப் பயிற்சியும் (பிசியோதெரபி) கொடுக்கப்படும். இப்பள்ளி தொடர்பான மேலும் விவரங்களுக்கு 95430 25483, 73052 90365-ஆகிய தொலைபேசி எண்ணினை தொடர்பு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.