செய்திகள்மாநகராட்சி

மதுரை மாநகராட்சி வரவேற்பு தோரண வாயில்களுக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி

Painting and renovation work of Madurai Corporation Welcome Portal Gates

மதுரை மாநகராட்சியின் சார்பில் மதுரை மாநகர் எல்லை பகுதிகளில் வரவேற்பு தோரண வாயில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர், பேருந்து நிலையம் பகுதி நுழைவுவாயில், கே.கே.நகர் பகுதி நுழைவுவாயில், தமுக்கம் மைதானம் பகுதி நுழைவுவாயில், விராட்டிபத்து பகுதி நுழைவுவாயில், விரகனூர் பகுதி நுழைவுவாயில், பசுமலை பகுதி நுழைவுவாயில் ஆகிய பகுதிகளில் சிறப்புமிக்க வரவேற்பு தோரண வாயில்கள் உள்ளன. இத்தோரண வாயில்கள் புதுப்பொலிவு பெறும் வகையில் அனைத்து தோரண வாயில்களிலும் வர்ணம் பூசும் பணி மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மதுரை மாநகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையில் மதுரையின் வரலாற்றை போற்றும் வகையில் பாத்திமா கல்லூரி ரவுண்டானா பகுதியில் மீனாட்சியம்மன் தேரும், ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் ஜல்லிக்கட்டு காளைசிலையும், பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பத்துத்தூண்களும், திருப்பரங்குன்றம் ரவுண்டானா பகுதியில் மயில் சிலையும், செல்லூர் பகுதியில் கபடி வீரர்கள் சிலையும் உள்ளிட்ட மதுரையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் அனைத்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை முறையாக மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: