செய்திகள்

மதுரை மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்

Action to increase maternity facilities in Madurai Corporation Hospitals | Mayor V. Indrani Ponvasant

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில், மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், தலைமையில் மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மேயர், தெரிவித்ததாவது : மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மண்டல மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவத்தில் பணியாற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் பொதுமக்களுக்கு முறையாக சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் பொறுப்புடன் பணியாற்றுவது குறித்தும்,

முறையான மருத்துவ பரிசோதனைகளை நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அளிப்பது, மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன், இரத்த கொழுப்பு, தொற்றா நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ளுதல்.

மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக கவனத்துடன் மருத்துவ சேவையை அளிக்க வேண்டும் தொடர்ந்து பிரசவத்திற்கு பின்பு தாய்சேய் இருவரையும் மருத்துவ பரிசோதனை, ஊட்டசத்து மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு விகிதத்தை மேலும் அதிகப்படுவதற்குகேற்ப தங்களின் பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் பணியாளர்கள், உபகரணங்கள், மருந்துகள், கட்டிட வசதி, தேவைக்கேற்ப விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.

மேலும் ,மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறையை சார்ந்த அனைவரும் பொதுநலம் கருதி சேவைமனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் ,துணை மேயர் தி.நாகராஜன், சுகாதாரத் குழுத் தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மண்டல மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: