செய்திகள்மாநகராட்சி

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 87 மனுக்கள் | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் பெற்றுக்கொண்டார்

Madurai Municipal Corporation Public Grievance Redressal Camp 87 Petitions | Mayor V. Indrani Ponvasant received

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணிபொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் (19.07.2022) நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக 18 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 2 மனுவும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 8 மனுக்களும், தெருவிளக்கு தொடர்பாக 1 மனுவும், காலிமனை வரிவிதிப்பு வேண்டிய 6 மனுவும், சொத்து வரி திருத்தம் செய்ய வேண்டி 10 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 4 மனுவும், சாலை வசதி வேண்டி 13 மனுக்களும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் வேண்டி 22 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 3 மனுக்களும் என மொத்தம் 87 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.

இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கண்காணிப்பாளர்கள், உதவிப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: