செய்திகள்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையின்றி வேலை நிறுத்தம் | சாலைகளில் 850 டன் குப்பைகள் தேக்கம்

Madurai Corporation cleaning staff strike indefinitely | 850 tons of garbage stagnant on the roads

மதுரை மாநகராட்சியில் 4,500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் & 1,500க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுரை மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் போராட்டம், 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் என 3 சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினக்கூலி தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரைனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை, ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் என கோரிக்கை, விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை.

வேலை நிறுத்தம் தொடர்பாக 3 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தற்போது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது, இதனிடையே சாலைகளில் 850 டன் அளவில் குப்பைகள் தேக்கமடைந்து உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: