குற்றம்செய்திகள்

மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ் மூலம் பண மோசடி | மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Money fraud through WhatsApp in the name of Madurai Corporation Commissioner Complaint at City Police Commissioner's office

மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்று தற்போது பணிபுரிந்துவருகிறார்.

இவர் நாள்தோறும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து நேரடி ஆய்வுசெய்வதோடு, பணி விவரங்கள் குறித்து அவ்வப்போது மாநகராட்சி மண்டல, இணை மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திவருகிறார்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி. ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் கணக்கு தொடங்கி அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் உதவி ஆணையாளர்களுக்கு தனிதனியாக மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக பணம் வேண்டும் என அனுப்பியுள்ளனர்.

இதனை நம்பி சிலர் பணத்தை அனுப்பி ஏமாற்றமடைந்துள்ளனர். சிலர் நேரடியாக ஆணையாளரை தொடர்புகொண்டு பணம் குறித்து சில அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அப்போது அதிகாரிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் சார்பில் மோசடி தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி செய்த எண்ணை தொடர்புகொண்டபோது பெண் ஒருவர் பேசியதும், மோசடியாக பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் (அமேஷான்) பெயரில் இது போன்ற மோசடி நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ்அப் பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது மாநகராட்சி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் பெயர்களில் மோசடி வாட்ஸ் அப் எண் தொடங்கி மோசடி நடைபெற்றுள்ளதும் குறிப்பிடதக்கது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: