மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் தேவைப்படுவோர் வாட்ஸ் அப் செய்து பயன்பெறலாம்
Those who need vegetables and fruits in the areas under Madurai Corporation can make use of WhatsApp

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் காய்கறிகள்,பழங்கள் தேவைப்படும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்ணில் வாட்ஸ் அப் செய்து பயன்பெறலாம் ஆணையாளர் ச.விசாகன் தகவல்
மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசின் உத்தரவின்படி முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் 100 வார்டுகளிலும் மதுரை மாநகராட்சி, தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயத்துறை ஆகிய துறைகளின் மூலம் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள பொதுமக்களுக்கு வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த தேவையை கணக்கிட்டு மதுரை மாநகரட்சியின் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்: 842 842 5000 என்ற எண்ணில் றாயவளயிp அநளளயபந செய்து தகவல் தெரிவிக்கலாம்.
எனவே காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகளவில் தேவைப்படும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மேற்காணும் எண்ணில் தகவல் தெரிவித்து பயன்பெறுமாறு ஆணையாளர் ச.விசாகன் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.