செய்திகள்மாநகராட்சி

மதுரை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்

One Day Training Workshop for Madurai Students Mayor V. Indrani Ponvasant inaugurated it

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 தத்தனேரி வி.க.மேல்நிலைப் பள்ளியில் ஒரு நாள் பயிற்சி பட்டறையை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் (12.07.2022) துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சியுடன் அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் இணைந்து மாநகராட்சியின் பள்ளிகளில் டிஜிட்டல் ஈஃக்குலைசர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக “Aerodynamics of Glider, Hydro Blast and Rocketry” எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை மாநகராட்சி திரு.வி.க.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையை மதுரை மாநகர மேயர் திருமதி.வ.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் மாணவ, மாணவிகள் Rocket Assembling and flying, flight simulator, Glider fabrication, Water Rocketry மற்றும் Soldiering ஆகியவற்றை தாங்களே தயார் செய்வதற்கான பயிற்சியும், Aero Dynamics தொடர்பான உயர்கல்வி மற்றும் அதைச் சார்ந்த வேலை வாய்ப்புக்களைப் பற்றிய விழிப்புணர்வையும் பெற்றனர்.

பயிற்சியின் முடிவில் மாணவர்கள் குழுவாக செய்த Water Rocket, Glider மற்றும் Rocket போன்றவற்றை மைதானத்தில் பறக்க விட்டுக் காண்பித்து மகிழ்ந்தனர். இந்த பயிற்சி பட்டறையில் சுமார் 18 மாநகராட்சி பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மரியசெல்வநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், அமெரிக்கன் இந்திய பவுண்டேசன் மண்டல மேலாளர் பாஸ்கரன், முதன்மை செயல் அலுவலர் ஆனந்த்மேகலிங்கம் தமிழ்நாடு மாநில திட்ட மேலாளர் குகப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி.குணரேஷ்மா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: