
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அதற்காக மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைதொடர்ந்து மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைக்கைதிகள் சிறை வளாகத்தில் களிமண்ணால் ஆன சிலைகளை செய்து அதனுள்ளே புன்னை, புங்கை, வேப்பம், நாவல் உள்ளிட்ட மரங்களின் விதைகளை வைத்து தயார் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம் சிறை முன்பாக உள்ள சிறை அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1