செய்திகள்போலீஸ்

மதுரை மத்திய சிறையில் பிளேடால் கழுத்தை கிழித்து தற்கொலைக்கு முயற்ச்சித்த கைதியால் பரபரப்பு

In Madurai Central Jail, a prisoner tried to commit suicide by slitting his throat with a blade

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியை சேர்ந்தசின்னராஜ் மகன் ஆரோக்யசாமி என்பவர் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2015-ம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை இவர் தனக்குத் தானே பிளேடால் கழுத்தை கிழித்து கொண்டிருந்தபோது அதனை பார்த்த மற்ற கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மதுரை மத்திய சிறை துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக மன அழுத்ததில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: