செய்திகள்போலீஸ்விபத்து

மதுரை பைபாஸ் நேரு நகரில் போதையில் வந்த ஷேர் ஆட்டோ விபத்து | போதை ஓட்டுநர்களை தடுக்க காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

Drunk share auto accident in Madurai Bypass Nehru Nagar | Public demand for police to stop drugged drivers

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் நேற்று மாலை 6.55 மணி அளவில் நேரு நகர் உள்ளே இருந்து பயணிகளை இறக்கிவிட்டு ஆட்டோ ஒன்று வந்து தனியார் ஒர்க்ஷாப் அருகே நின்று கொண்டிருந்தது. அப்பொழுது பைபாஸ் சாலையில் இருந்து நேரு நகருக்கு உள்ளே ஷேர் ஆட்டோ ஒன்று தள்ளாடியபடியே வந்துள்ளது.

அப்பொழுதுதான் அவர் பாதி தூரம் வந்த பிறகு தவறான பாதையில் வந்து விட்டோம் என தெரிந்தவுடன். ஆட்டோவை மீண்டும் ஒர்க் ஷாப் உள்ளே விட்டு திருப்புவதற்காக ஆட்டோவை திருப்பி உள்ளார். அப்பொழுது எதிரே உள்ள ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஆட்டோவில் முன் பகுதி சேதமானது. உடனடியாக ஆட்டோ ஓட்டுனர் எனக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் எனவும், இல்லையென்றால் நான் காவல் நிலையம் சென்று புகார் செய்வேன் எனவும் தெரிவித்தார். என்னிடம் பணம் இல்லை நாளை தருகிறேன் என தள்ளாடியபடியே கூறினார்.

எனினும் மற்றொரு ஆட்டோக்காரர் பணம் தந்தால் தான் ஆட்டோவின் சாவியை தருவேன் என கரராக சொல்லிவிட்டார். சிறிது நேரம் வாக்குவாதத்திற்கு பின் 500 கொடுத்து விட்டு போதையில் இருந்த ஆட்டோவை எடுத்து மீண்டும் பைபாஸ் சாலைக்கு சென்று விட்டார்.

அதன் சிசிடிவி கட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமீப காலமாக ஷேர் ஆட்டோக்களில் மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனம் ஓட்டுவது பட்டப் பகலில் அதிக அளவில் நடைபெறுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

பைபபாஸ் நேரு நகரில் நடந்தது சிறிய விபத்து என்பதால் காயம் ஏதுமின்றி தப்பினர். இதே இவர் மெயின் ரோட்டில் வாகனத்தை இயக்கி வேறு ஏதும் பெரிய விபத்து ஏற்பட்டால் ? உயிர் பலி ஏற்படும் வாய்ப்புள்ளது என குற்றச்சாட்டு எழுகிறது.

எனவே, காவல்துறை தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு, போதையில் வரும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. போதை ஓட்டுநர்களை காவல்துறை கண்டுகொண்டு, தகுந்த தண்டை கொடுத்தால், விபத்துக்களை தவிர்க்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: