
மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்தவர் மனோ. இவர் தனது காரில் தனது குடும்பத்துடன் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பீசா கடைக்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். இவர் தனது காரை மணி நாகப்பா ஹீரோ ஹோண்டா ஷோரூம் முன்பு இரவு 8 மணிக்கு நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடையில் உணவருந்த சென்றுள்ளார்.
அதன் பிறகு, 8.45 மணிக்கு திரும்பி வந்து பார்க்கும்போது காரின் வலது பக்க பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த லேடீஸ் கேன் பேக்கில் இருந்த பணம் ரூ.4500/-உடன் இரண்டு உயர்ந்த செல்போன் மற்றும் வீட்டின் சாவி உள்ளிட்டவை பேக்கையும் எடுத்து சென்று விட்டனர்.
உடனடியாக எஸ் எஸ் காலனி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் பைபாஸ் ரோடு பகுதியில் அடிக்கடி நடந்து வருவது பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தெரிவிக்கையில், செல்போன் மற்றும் பணம் மற்றும் பைகளை காருக்குள் வைத்து செல்ல வேண்டாம் எனவும், கார் கண்ணாடியில் எளிதில் உடைத்து சில வினாடிகளிலே திருடிச் செல்லும் நபர்கள் உள்ளார்கள் என இவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.