
மதுரை பெத்தானியபுரம் பிரதான சாலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீருக்காக பள்ளம் தோண்டப்பட்டு பைப்புகள் பதிக்கப்பட்டன.
இந்நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலை ஓரங்களில் மலை போல் மணல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தையும், மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூட பயன்படுத்தி உள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுகிறது. வாக ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உடனடியாக சாலைகள் முறையாக சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்தால், வாகன ஓட்டிகளும், சாலையை கடக்கும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1