செய்திகள்போலீஸ்

மதுரை பெண்கள் தனிச்சிறையில் சமூக இயல் வல்லுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு | தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

Selection of people for the post of Social Physiotherapist in Madurai Women's Prison Eligible candidates can apply

மதுரை பெண்கள் தனிச்சிறையில் சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடம் ஒன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடம் பொதுப்போட்டி (முன்னுரிமைஅற்றவருக்கு) ஒதுக்கப்பட்டதாகும்.

சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடத்திற்கு 25.10.2022 அன்றைய நிலையில் குறைந்தபட்சம் வயது தகுதி 18 ஆகவும், அதிகபட்ச வயது (OC-32, BC & MBC -34, SC&ST, SCA – 37) ஆகவும் உள்ளது.

முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. சமூக இயல் வல்லுநர் Worker) பதவிக்கு அரசாணையின் படி அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதி கீழ்கண்டவாறு.

Social Case

a) A Post graduate degree in Social Work or Social Service or Social Science or Criminology or Socilogy or Andragogy (Adult Education) (or)

b) A Degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology (or)

c) Any other degree with diploma in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology

இப்பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.15,000/- வழங்கப்படும் (Honoranium Basis Pay Rs. 15,000/- per month).

தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்விச்சான்று, ஜாதிச் சான்று மற்றும் மேற்படி பணியிடம் தொடர்பான பயிற்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை சிறைக் கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, மதுரை 16 என்ற முகவரிக்கு 15.12.2022-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டுமென தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: