ஆன்மீகம்செய்திகள்

மதுரை பூங்கா முருகன் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி | பக்தர்கள் ரூ.7,62,921 காணிக்கை

Madurai Park Murugan Temple Bill Counting | Devotees donate Rs 7,62,921

மதுரை மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீபூங்கா முருகன் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி மாண்புமிகு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி இராஜாஜி பூங்கா அருகே அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழி படுகின்றனர்.

இக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் (25.05.2022) காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்து 921 காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டு இருந்தது.

இந்நிகழ்வில் துணை மேயர்தி.நாகராஜன், உதவி ஆணையாளர் (வருவாய்) (பொ) தட்சிணாமூர்த்தி, இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் இராமசாமி, மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், மேலாளர் மற்றும் பேஸ்கார் குமரேசன், திரு.சரவணன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: