அரசியல்செய்திகள்

மதுரை புறநகர் பாஜக விவசாய அணி சார்பாக சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

International Yoga Day on behalf of the Madurai suburban BJP agricultural team

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆலோசனையின் படியும், மதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக மதுரை கிழக்கு ஒன்றியம் மாயாண்டிபட்டியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இதில், விவசாய அணி மாவட்டத் தலைவர் பூமி ராஜன், பொது செயலாளர் ஆதிசங்கர், மாவட்டத் துணைத் தலைவர் துரைசாமி, மாவட்டத் தலைவர் பூமிநாதன், விவசாய அணி கிழக்கு மண்டல தலைவர் சிவசாமி, தெற்கு மண்டலத் தலைவர் கண்ணன், மேலூர் மேற்கு மண்டல தலைவர் சரவணன், நரசிங்கம்பட்டி தலைவர் சரவணன், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

யோகா தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், பாஜக மதுரை புறநகர் மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் டாக்டர் ஆதிசங்கர் நன்றி கூறினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: