செய்திகள்போலீஸ்

மதுரை புது மண்டபம் | காவல்துறை பாதுகாப்புடன் கடை பொருட்கள் அப்புறப்படுத்தும் பணியில் கோயில் ஊழியர்கள்

Madurai New Hall | Temple staff on duty to dispose of shop items with police protection

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 2018-ல் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு கடைகள், வசந்த ராய மண்டபம் இருந்து அரிய சிற்பங்கள் தீயால் கடுமையாக சேதம் அடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள புது மண்டபத்திலும் அரிய சிற்பங்கள் கல் தூண்கள் உள்ளதால் அங்குள்ள கடைகளை மாநகராட்சியின் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்ற கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து ,கடந்த ஆண்டு குன்னத்தூர் சத்திர கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், புது மண்டபத்தில் இருந்த 300 கடைகளை இடமாற்றம் செய்வதாகவும், ஏல முறையில் சுமார் 268 க்கும் மேற்பட்ட கடைகள் சத்திரத்திற்கு சென்றனர்.

இந்த நிலையில், ஏலம் எடுக்கும் 33 கடைகள் மற்றும் பொது மண்டபத்தை விட்டு இடம் மாற்றம் செய்யாமல் இருந்து வந்துள்ளது. ஜூன் 3ம் தேதி துவங்கவுள்ள வசந்த உற்சவம் இதற்காக புது மண்டபத்தை சுற்றி கடைகள் உள்ள பகுதியில் தண்ணீர் நிரப்ப படிக்கட்டுகளை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காவல்துறையினரின் உதவியுடன் கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகின்றனர். புது மண்டபத்தில் உள்ள கடைகளில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: