
மதுரை தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பாலரங்கபுரத்தில் அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையின் பின்புறம் புதிதாக துவங்கபட்ட அரசு மண்டல புற்றுநோய் ஸ்கேன் மையம் செயல்பட்டு வருகிறது. பாலரங்கபுரம், கீழ் மதுரை முனிச்சாலை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மக்கள் சிறுசிறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அருகே குப்பைத்தொட்டி இருந்தும் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டிச்செல்வதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு நோய்பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதாளச் சாக்கடை அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் ஓடுகிறது, மாடுகள் உட்பட கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் பாதசாரிகள் இது நோய்கள் பரப்பும் இடமா ? நோய்களை தீர்க்கும் இடமா ? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.