அமைச்சர்செய்திகள்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் | பாலின பாரபட்ச நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை இந்தியன் வங்கி பதில்

Madurai Member of Parliament Su Venkatesan's letter Indian Bank does not follow gender discriminatory practices Answer

இந்தியன் வங்கி கடந்த வெளியிட்டு இருந்த பணி நியமன வழிகாட்டல்களில் கருவுற்ற காலத்தில் மகளிருக்கு பணிமனங்கள் மறுக்கப்படுகிற அம்சம் இடம் பெற்று இருந்தது.

பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார்.

பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவர் இடம் இருந்து உடல் நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்.

என்ற அந்த வழிகாட்டல் அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை எனவும், அது கைவிடப்பட வேண்டுமெனவும் இந்தியன் வங்கி தலைவர் திரு சாந்திலால் ஜெயின் அவர்களுக்கு ஜூன் 12 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

இதற்கு ஜூன் 16 அன்று பதில் அளித்த இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் அஸ்வினி குமார் “சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்த அடிப்படையிலேயே பணியில் சேர கால அவகாசம் சிலருக்கு தரப்பட்டது” என்று பதில் அளித்திருந்தார். 1987 வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையின் சுற்றறிக்கை ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.

எனவே மீண்டும் ஜூன் 21 அன்று இந்தியன் வங்கி தலைவருக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தேன்.

சம்பந்தப்பட்ட மகளிர் ஊழியர்கள் வேண்டுகோளின் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் சில நேரங்களில் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்ற விளக்கத்திற்கும், பணி நியமன வழி காட்டல்களுக்கும் ஒன்றுக்கொன்று பொருந்தாத முரண் இருப்பதை சுட்டிக் காட்டி பணி நியமன வழிகாட்டல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அல் கடிதத்தில் எழுதி இருந்தேன்.

அதற்கு மீண்டும் ஜூலை 4, 2022 அன்று இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் திரு அஸ்வினி குமார் அவர்களிடம் இருந்து பதில் (CO: HRM/GR-O/124/2022-23) வந்துள்ளது.

“எங்களது முந்தைய கடிதத்தில் இப் பிரச்சினை மறு பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தோம். அதன்படி பரிசீலனை மேற்கொண்டு, இனி தவறான பொருள் கொள்தல் நிகழ்ந்து விடக் கூடாது என்று அந்த விதியை நீக்கி இருக்கிறோம்.

இதுவரை எந்த மகளிரும் இந்தியன் வங்கியில் பணி நியமனம் மறுக்கப்பட்டதில்லை என்றும் வங்கி பாலின பாரபட்ச நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தோடு இப் பிரச்சினை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு உளமார வேண்டுகிறோம்.

மகிழ்ச்சி. இந்தியன் வங்கிக்கு நன்றி. இந்திய நாட்டின் பெருமை மிக்க அரசு வங்கியான இந்தியன் வங்கியின் பங்களிப்பு மீது அளப்பரிய மரியாதை எப்போதும் உண்டு. வங்கி மென்மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்.

இந்தியன் வங்கியில் எட்டப்பட்டுள்ள தீர்வு பாலின பாரபட்ச நடைமுறைகளுக்கு எதிரான இன்னொரு முன்னோக்கிய நகர்வு. என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: