
மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தினமும் மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும், தேனி, திண்டுக்கல் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வர்கள்.
அதோடு கிடாவெட்டி பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தியும் வழிப்பட்டு செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொறியாளர் ராகவன் – சுபாதேவி தம்பதியினர் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் பொண்ணு பாண்டியன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவிவிடம் காணிக்கையாக வழங்கினர்.
அந்த தங்க கவசத்தை பெற்று கொண்ட அறங்காவலர்கள் பாண்டி முனீஸ்வரருக்கு சாற்றப்பட்டு அலங்காரங்கள் செய்து சிறப்பு தீபாரணைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.