
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் இன்று காலை 11 மணி அளவில் திருப்பரங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்த காரும் காளவாசல் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர் பலத்த காயங்கள் அடைந்தார் உடனடியாக அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு 108 அவசர ஊர்தியை தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்டு பலத்த காயமடைந்தவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதே போல் நேற்று இரவு திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து திருடிய வாகனத்தில் வந்த நபர் இதே பகுதியில் விபத்துக்குள்ளாகி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.