
மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் இந்த கோவிலில் வருடா வருடம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று கூழ் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29.07.22) என்பதால் சுமார் 6க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் காய்ச்சிக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது மேலத்தெரு பகுதியைச் சேர்த்த முத்துக்குமார் என்கின்ற முருகன் வயது 54. இவரும் கூழ் காய்ச்சுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இவருக்கு வலிப்பு வரவே, கொதிக்கும் கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து உள்ளார்.
இதில் கொதிக்கும் கூழானது அவர் உடல் முழுவதும் கொட்டியுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு, 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
65 சதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு கூழ் காய்ச்சும்போது, இந்த சம்பவம் நடைபெற்றதால், அப்பகுதி மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.