பர்மாவில் பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பின், அங்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு அனைத்தையும் துறந்து, குடும்பத்துடன் மதுரையில் தஞ்சம் புகுந்து, அக்குடும்பத்தின் பெண் ஒருவரால் உருவாக்கப்பட்டதுதான் இன்றைக்கு மதுரையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக இயங்கி வரும் பர்மா இடியாப்பக்கடை.
நாள்தோறும் இந்த கடையில் இடியாப்பம் சாப்பிட இதற்கென வரும் ரசிகர் கூட்டம் தனி. மதுரை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை தாண்டி அயல்நாட்டவரும் வந்து உண்ணும் சிறந்த இடியாப்ப உணவகம்.
மதுரை கீழவெளி வீதியில் (மிசன் மருத்துவமனை எதிர்புறம்) அமைந்துள்ளது இந்த பர்மா இடியாப்ப கடை. இதை இப்பொழுது திருமதி தேவிகா அவர்கள் நடத்தி வருகின்றார். இது வரை இங்கு சாப்பிடாதவர்கள் “ஹலோ மதுரை ” பெயர் சொல்லி சாப்பிடவும்.
கூடுதல் கவனிப்பு நிச்சயம்.~~~
#HelloMadurai #BarmaIdiyappam #SVS
~~~~~~~~~~~~~~~~~~~~
More details
Contact Hello Madurai Team,
9566531237