
தல்லாகுளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன். இவர் போலீசாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பனங்குளம் கண்மாய் அருகே சென்ற போது கும்பல் ஒன்று போலீசை கண்டதும் பதுங்கியது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் திருப்பரங்குன்றம் வடக்கு ரத வீதி ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி 20, திருப்பரங்குன்றம் சாமி பிள்ளை தெரு முருகன் மகன் தர்மா 30, திருப்பரங்குன்றம் கூடமலை தெரு பாலாஜி மகன் நாகராஜன் 21 என்று தெரியவந்தது.
அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் முதுகின் பின்புறம் வாள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தார். அவர்கள் எதற்காக அங்கே பதுங்கி இருந்தனர் என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1