செய்திகள்

மதுரை பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள்; அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

Madurai Press News

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பத்திரிக்கைளாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கியும் அரசு கொரோன சிறப்பு மருத்துவமனையில் விரிவாக்கப்பட்ட 250 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோன சிகிச்சை மையத்தையும் மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனையயில் 200 படுக்கைகள் கொண்ட விரிவாக்கப்பட்ட சிறப்பு கொரோன சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தாH.

மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கியும் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் விரிவாக்கப்பட்ட 250 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தையும் மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட விரிவாக்கப்பட்ட சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவினை இன்று (06.06.2021) திறந்து வைத்து தெரிவிக்கையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய நடவடிகையினால் மதுரை மாவட்டத்தில் கொரோன நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 1500 -ல் இருந்து தற்போது 420 ஆக குறைந்து உள்ளது. அரசு கொரோன சிறப்பு மருத்துவமனையில் விரிவாக்கப்பட்ட புதிதாக ஆக்ஸிஐன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தோப்பூர் அரசு மருத்துவமனையயிலும் புதிதாக ஆக்ஸிஐன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட விரிவாக்கப்பட்ட சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவினையும் இப்போது திறந்து வைக்க இருக்கிறோம். இது மக்களுக்கு நிறந்தர பயன்பாட்டில் இருக்கும்.

இதே போன்று கிராமங்களிலும் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கொரோனா நோய் தொற்றின் மூன்றாம் அலை வரநேHந்தாலும் அதிலிருந்தும் நோய் தொற்று பரவலை நாம் எளிதில் கட்டுப்படுத்தாலாம்.

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்கச்செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முன்களப்பணியளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிற்சாலைகளிள் பணிபுரியும் தொழிளாளர்கள் ஆகியோHகளுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசிகள் பெருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.விசாகன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
16
+1
0
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: