செய்திகள்

மதுரை பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வணிகவரி & பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவு

P. Murthy, Minister of Commercial Taxes & Registration has directed to expedite the construction of roads in Madurai areas

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 ஆனையூர், கூடல்நகர் மற்றும் மண்டலம் 2 திருப்பாலை, கண்ணனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பணியினை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அ இன்று (16.12.2021) துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்கீழ் அனைத்து துறைகளிலும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளான கூடல்நகர், ஆனையூர், சம்பந்தர் ஆலங்குளம், திருப்பாலை, கண்ணனேந்தல், பரசுராமன்பட்டி, ஆத்திக்குளம், உத்தங்குடி, நாகனாகுளம் ஆகிய பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்து சாலைகள் சேதமடைந்ததாலும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் மழைக்காலங்களில் பல்வேறு சாலைகளில் சேதமடைந்து இருப்பதாலும் அந்த சாலைகளை மேம்படுத்த மூலதன மானிய நிதி (Capital Grant Fund) 2021-22 ஆண்டு

மற்றும் 2021-22 ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் (Tamilnadu Urban Road Infrastructure Project Fund – TURIF)   மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 103 தார் சாலைகளை ரூ.16.32 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் யாவும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், நகரப்பொறியாளர் (பொ)அரசு, உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் திரு.பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் திரு.ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளர் சுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: